
H3N8 பறவைக் காய்ச்சலால் முதல் மனித மரணம் சீனாவில் பதிவாகியுள்ளது.
இதன்படி, தென் சீனாவில் 56 வயதான பெண் ஒருவர் H3N8 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் சமீபத்தில் இறந்துள்ளார்,
மேலும், இது நாட்டில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணமாகக் கருதப்படலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளதுடன் H3N8 என்பது பறவை நோயுடன் தொடர்புடைய ஒரு கிளையினம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சீனாவில் இரண்டு நபர்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி இருந்த நிலையில் மனிதர்களுக்கு இந்த நோய் பரவியதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, H3N8 நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு சீனா அரசாங்கம் அதன் கண்காணிப்பை முடுக்கிவிட்டதால் மேலும் தொற்றுநோய்களின் ஆபத்து குறைவாக இருப்பதாக ஐநா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.