
இலங்கை 2 சர்வதேச கால்பந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன் இதற்கான காரணமாக தற்போது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்காலிக தடை காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆடவர் உதைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
அத்துடன், 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்டச் சம்பியன்ஷிப் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்காது என உலகக் கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.