
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, நாளாந்த எரிபொருள் விநியோகத்தை அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தினமும் 4,650 மெட்ரிக் டொன் பெட்ரோல் 92 மற்றும் 5,500 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசல் வெளியிடப்பட உள்ளது.
இதேவேளை, QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவது கடந்த வாரத்தில் கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதுடன் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளை வழங்காத நிரப்பு நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள் விற்பனை குறைந்த மட்டத்தில் இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு , இதுவரை 60 சதவீதமாக இருந்த எரிபொருள் விற்பனை தற்போது 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் QR குறியீடுகளைப் பயன்படுத்தாத 66 எரிபொருல் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.