
மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மில்கோ நிறுவனம் நாட்டிலுள்ள அனைத்து பால் பண்ணையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
இதன்படி, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி:
இன்றும் நாளையும் மேல், தென், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் சில இடங்களில் மிக அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து பால் பண்ணையாளர்களுக்கும் தங்கள் மாடுகளை எப்போதும் நிழல் தரும் இடத்தில் வைத்து, முடிந்தவரை குடிக்க தண்ணீர் கொடுக்குமாறு மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.