
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி மாநாட்டின் மூன்றாம் நாளில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் இந்தியா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஆரம்பமாகின.
இதன்படி, ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளதுடன் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி கலந்துரையாடல் சுற்றில் பங்கேற்றதோடு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாரிஸ் கிளப்பின் இயக்குனர் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இலங்கையின் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்து கொண்டுள்ளதுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை சார்பாக விசேட அறிக்கையொன்றையும் விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.