
சுமார் 20 சதவீதமான தனியார் பேருந்துகள் இன்று இயங்குவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பஸ்களில் பயணிப்பவர்களின் பற்றாக்குறையும் காணப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களின் வசதிக்காக இன்று முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஏப்ரல் 18ஆம் திகதி வரை மேலதிக பேருந்துகள் மற்றும் பயண நேரங்கள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் இயங்கும் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய தினம் 34 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.