
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை குறிவைத்து புகை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் வகாமா பிரதேசத்தில் பொது இடத்தில் விரிவுரை ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, பிரதமர் மீது ஒருவர் புகை குண்டை வீசியுள்ள நிலையில் உடனே பாதுகாப்புப் படையினர் பிரதமரை அந்த இடத்தில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தியதுடன், குறித்த வெடிகுண்டும் எப்படி வெடித்து புகையை வெளியேற்றியது என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயும் தனது தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த தாக்குதல் இன்னும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.