
எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது கட்சித் தலைவர்களின் சந்திப்பு இதுவாகும் எனவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.