
சூடானில் உள்ள கார்டூம் சர்வதேச விமான நிலையத்தில் சவுதி பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சூடானில் இருந்து சவூதி அரேபியாவிற்கு பயணிக்கவிருந்த சவூதி விமான சேவைக்கு சொந்தமான ஏ-330 விமானம் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த தாக்குதலை சவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதோடு பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், விமானத்தில் இருந்த அனைத்து பணியாளர்களும் பத்திரமாக சூடானில் உள்ள சவுதி தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.