
இம்மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், சமய நிகழ்வுகளைத் தவிர, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் போன்றவற்றுக்கு காலி முகத்திடலை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.
மேலும், அந்த நிலப்பரப்பை பொதுமக்கள் இலவச நேரத்தை செலவிடுவதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.