
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான ஏற்பாட்டிற்கான நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதோடு இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.