
(கல்முனை நிருபர்)
புனித ரமழான் மாத பாடசாலை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்றநோக்கில் கல்முனை முஹம்மதிய்யா இஸ்லாமிய நூலகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற மாணவர்களுக்கான ரமழான் கால இலவச செயலமர்வு இவ்வருடமும் கல்முனையில் இடம்பெற்றது
இத் செயலமர்வில் இஸ்லாமிய அகீதா,பிக்ஹ், ஹதீஸ் மற்றும் துஆ மனனம் ஆகிய வகுப்புகள்நடைபெற்றதுடன், வுழு மற்றும் தொழுகை முறைகள் செய்முறை மூலமாகவும் பயிற்றுவிக்கப்பட்டன.
செயலமர்வில் முதலாம்,இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பண பரிசில்கள்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் செயலமர்வு வகுப்பில் கலந்து கொண்ட அனைத்துமாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.