
1,320 புதிய வைத்தியர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நியமனம் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி அன்றைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த வைத்தியர்களை மிகவும் கடினமான பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, நாட்டில் தற்போதுள்ள மொத்த வைத்தியர்களின் எண்ணிக்கை சுமார் 19,000 ஆகவும், புதிய வைத்தியர்களை நியமிக்கும் போது 20,000 ஐ தாண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போது வருடாந்தம் 1,500 முதல் 1,800 வரையான மாணவர்கள் மருத்துவப் பீடங்களுக்கு அனுமதிப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதனை 5,000 ஆக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.