
இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணப் பெட்டிகளை உத்தியோகபூர்வமாக நாளை (22) விவசாய அமைச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கவுள்ளது.
இதன்படி, யூரியா உரம் மற்றும் விவசாய உபகரண தொகுப்புகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஹம்பாந்தோட்டை விவசாய பூங்காவில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதுடன் நெல் சாகுபடி முறையை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாராசூட் நெல் சாகுபடி முறையை ஊக்குவிப்பதற்காக நெற்பயிர்களுக்கு உயர்தர விதைகளை வழங்க தேவையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருப்பது அதிக மகசூலைப் பெறுவதற்கான வழி என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்கு மேலதிகமாக பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உயர்தர விதை நெல் பதப்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதோடு நாளைய நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டென்னிஸ் சாய்பி, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விமலேந்திர சரண் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.