
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 08 மயக்க மருந்து நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தற்போது வெற்றிடமாக உள்ள விசேட வைத்தியர்களின் கடமைகள் வழமைக்கு மாறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
மேலும், எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டி ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கே குறித்த மயக்க மருந்து நிபுணர்களை நியமித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.