
வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக சென்றபோது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி 23 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நவம்பர் 2022 இல், 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாமியக் கொடியுடன் கூடிய பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்த நிலையில் வியட்நாமிய கடலோரக் காவல்படையினர் குழுவை மீட்டநபர்களில் இதுவரை 151 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.