
பிரிட்டனினுடைய புதிய துணைப் பிரதமராக ஆலிவர் டவுடனை பிரித்தானியா அரசாங்கம் நியமித்துள்ளது.
இதன்படி, முன்னாள் துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டொமினிக் ராப் தனது ஊழியர்களை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இராஜினாமா செய்துள்ளார்.
மேலும், பிரிட்டனின் புதிய துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலிவர் டவுடன், பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கத்தின் கேபினட் அமைச்சராகப் பணியாற்றியவர் என்பதோடு பிரிட்டனின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.