
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து மற்றும் மூழ்கியதால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு தொடர்பான இறுதி அறிக்கை அடுத்த வாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அசேல ரகேவா கூறுகையில், இதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்த போதிலும் குறைபாடுகளை சரிசெய்து புதிய அறிக்கையை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமது அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் நட்டஈடு பெறுவதற்கு வழக்குத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
எனினும் கடற் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவிக்கையில் இலங்கையில் Express Pearl கப்பல் நட்டஈடு பெறுவதற்கு வழக்கு தாக்கல் செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் சிங்கப்பூரில் நட்டஈடு கோரும் வழக்கை மாற்றுவதன் மூலம் இலங்கை பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.