
தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரத்தில் உள்ள கட்சிகள் முடிவெடுக்கும் திறன் ஜனநாயகத்திற்குப் பெரும் அடி என்று பாஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தீர்மானம் எடுக்கும் திறன் தற்போது இழக்கப்பட்டுள்ளதாக பாஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதல் சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராக இருந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர்.