
வடக்கு கடற்பரப்பில் 196 கிலோகிராம் ஹெரோயின் இறக்குமதி செய்து வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த மேல்முறையீடு வரும் நாட்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கை விசாரித்த 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசத் தரப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.