
குவைத்தில் நீண்ட நாட்களாக இந்நாட்டுக்கு வரமுடியாமல் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 52 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி, இரு நாட்டு அதிகாரிகளின் தலையீட்டினால் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த குழுவில் 35 பெண்களும் 17 ஆண்களும் அடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததோடு இவர்கள் அனுராதபுரம், காலி, கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகலாய் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டார்.
மேலும், இவர்கள் குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்றுவிட்டு, அந்த வீடுகளை விட்டு வேறு இடங்களில் வேலை செய்து வந்ததாகவும் இலங்கைக்கு வருவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால், இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளின் தலையீட்டில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த குழு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு எனவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.