
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று செவ்வாய்கிழமை(25) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.பெளஸ் மற்றும் காரைதீவு கோட்ட கல்வி அதிகாரி ஜெ.டேவிட் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கியதோடு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பாதணிகளை மர்ஹூம் எம்.எம்.ஹனீபா குடும்பத்தினர் சார்பாக அக்கரைப்பற்று அமானா வங்கியின் உதவி முகாமையாளர் இப்திகார் அவர்களும், மாணவர்களுக்கான புத்தகப் பைகளை எம்.எஸ்.எம். சிராஜ் அவர்களும் மாணவர்களுக்குரிய அப்பியாசக் கொப்பிகளை அமெரிக்க நாட்டில் வசிக்கும் பொறியியலாளர் ஏ.எல்.நிப்றாஸ் அவர்களும் வழங்கினார்கள்.