
அமெரிக்கா எரிபொருள் நிறுவனமான RM Parks Shell, ஜூன் முதல் வாரத்தில் இருந்து இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒப்பந்தங்களில் மே மாதம் கையெழுத்திட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நேற்று ஆன்லைனில் சந்திப்பு நடத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேவையான வணிக உரிமங்கள், ஒப்பந்தங்கள், கொள்கைகள், உள்கட்டமைப்பு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் திகதிகள் மற்றும் செயல்பாடுகளை தொடங்குவதற்கான கால அளவு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் கடந்த வாரம் களஞ்சியசாலை முனையத்திற்கு சென்றிருந்த போது எரிபொருள் இறக்கம் தொடர்பில் ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தமது நிதி முதலீட்டின் ஒரு பகுதியினை மே மாதம் சர்வதேச ரீதியில் தேவையான வசதிகளை நவீனமயமாக்குவதற்கு ஆதரவளிகவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.