
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் மிகவும் வெளிப்படையான முறைமை தயாரிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 25 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 51 வானொலி அலைவரிசைகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு உரிமம் வழங்குவதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சம்பிரதாயமற்ற முறைமையின்றி லைசென்ஸ் வழங்கிய சேனல்கள் இருப்பதாகவும், இவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறிய அமைச்சர், அப்போது ஏற்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கான வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.