
நாட்டில் புதிய கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த 2 நாட்களில் 11 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினசரி தொற்றுகள் பதிவாகாத காலத்திற்குப் பிறகு, இலங்கையில் இருந்து கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நேற்றுமுன்தினம் பதிவாகிய கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 04 இருந்துள்ளதோடு நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளானதாக 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் புதிதாக பதிவாகிய நோயாளர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் தற்போது வரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களினுடைய எண்ணிக்கையானது ஆறு இலட்சத்து 72,150 எனவும் சுகாதார ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு முகமூடி அணிதல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவையை பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.