
நாடளாவிய ரீதியில் 331 பிரதேச செயலகங்களை இலக்காகக் கொண்டு இளைஞர் விளையாட்டுக் குழுக்களை பிராந்திய மட்டத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் பொலன்னறு மாவட்ட நிகழ்ச்சி அண்மையில் (26) வெலிகந்த, தமன்கடுவ, திம்புலாகல, ஹிகுராக்கொட பிரதேச செயலக அலுவலகங்களில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) காமினி விக்கிரமபால, சுகததாச விளையாட்டு அதிகாரசபையின் தலைவர், சுகததாச விளையாட்டு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜயலத் இளங்ககோன், விளையாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எரந்த லியனகே உட்பட சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.