
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற ஐவர் படுகொலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, இறக்கும் போது அவருக்கு 100 வயது எனவும் ஐந்து பேரைக் கொன்ற நபரே குறித்த பெண்ணையும் வெட்டியுள்ளதோடு மேலும் ஆபத்தான நிலையில் இருந்த பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.