
நுவரெலியா, நானு ஓயா கிளாசோ ஆரம்ப பாடசாலையின் 31 மாணவர்கள் உணவு ஒவ்வாமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளதோடு குறித்த மாணவர்கள் உணவு ஒவ்வாமையின் காரணமாக வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல மாணவர்கள் சிகிச்சை பெற்று தற்போது வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளதுடன் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று பாடசாலையின் ஆரம்பப்பிரிவில் பயிலும் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் மேலும் சில உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பாடசாலைக்கு உணவு வழங்கும் நபர் இன்று (28) 105 பிள்ளைகளுக்கு அரிசி, பருப்பு, சோயா மிட் மற்றும் பப்பாளி ஆகியவற்றை இனிப்பு வகையாக வழங்கியதாகவும், உணவை உண்ட பின்னர் அவர்கள் சுகவீனமடைந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன தெரிவித்துள்ளதோடு
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவு மாதிரிகள் மற்றும் மூலப்பொருட்கள் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனுராதபுரம் உணவு தரக் கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.