
ஆளும் கட்சியின் IMF தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த நிலையில். கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக ஏ.எச்.எம்.பௌசி செயற்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜுபுர் ரஹ்மான் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததினைத் தொடர்ந்து சஐக்கிய மக்கள் சக்தியினால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசி அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இதேவேளை, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் 95 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 25 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.