
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் சிலோன் இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும் குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு, சிலோன் இந்தியன் ஓயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வெளியிடப்படும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 333 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை குறைத்தது போன்று ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 135 ரூபாவினாலும் குறைக்க சிலோன் இந்தியன் ஓயில் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 310 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 330 ரூபாவாகவும் குறைந்துள்ளது.