
ஹொரோப்பொத்தானை – வவுனியா வீதியில் கிவுலகடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கபிதிகொல்லாவ பிரதேசத்தில் இருந்து ஹொரோப்பொத்தானை நோக்கி சென்ற இவர்கள் பயணித்த கார் இரண்டு மாடுகளுடன் மோதியதுடன் அருகில் இருந்த கல்வெட்டியிலும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, விபத்தின் போது காருக்குள் இரு இராணுவ வீரர்களும் மற்றுமொரு நபரும் இருந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த நபரை பொதுமக்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 09வது இராணுவப் படையணியின் 582 படைத் தலைமையகத்தின் பக்வத்தை, ஹொரண இராணுவ முகாமில் பணியாற்றிய இரு இராணுவத்தினர் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.