
எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, அதற்கான கணக்கீடுகளை பூர்த்தி செய்த பின்னர் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தமானது பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு போதுமானதாக இல்லை என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, உரிய எரிபொருள் விலை திருத்தங்களுக்கு அமைய பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டால் பஸ்கள் இயங்குவதை நிறுத்தும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பஸ் கட்டணத்தை குறைக்கும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை குறைந்தது 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.