
ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து உயர்தர மாணவர்களுக்காக வழங்கும் ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் விருது 2023 இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, 2022ம் ஆண்டு சாதாரண தர தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உயர்தரம் படிக்க தகுதி பெற்ற 3,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளதோடு அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு குறித்த உதவித்தொகையை 110 புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் மேல்மாகாணத்தின் 11 கல்வி பிராந்தியங்களில் அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான புலமைப்பரிசில்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வழங்கப்பட்டது.
இதன் கீழ், உதவித்தொகை பெறுபவர் தலா 5,000.00 ரூபா எனவும் மொத்தமாக 360 மில்லியன் ரூபாஇதற்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த புலமைப்பரிசில் விருதுடன், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை பைகள், புத்தகப் கொப்பிகள், குடைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பரிசு அட்டை என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதோடு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மீதமுள்ள புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புலமைப்பரிசில் பரிசுகள் மற்றும் நிதி நன்கொடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.