
நூருல் ஹுதா உமர்
கடந்த ஏப்ரல் 29,30 ஆகிய தினங்களில் பிலியந்தல சோமாவீர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற
நிப்போன் லயன்ஸ் 7 தேசிய மட்ட கபடி சம்பியன்ஷிப்பில் 20 வயது பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் கல்முனை கல்வி வலயத்தின் நிந்தவூர் கமு/கமு/ அல்-மதீனா மஹா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளது.
தேசிய மட்ட கபடி சம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வவுனியா ஈரட்டபெரியகுளம் வ/பரகும் மகா வித்தியாலயத்தை வீழ்த்தி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நிந்தவூர் கமு/கமு/ அல்-மதீனா மகா வித்தியாலய அணி இதற்கு முன்னரும் பல சாதனைகளை தனதாக்கி கொண்டுள்ளது. இப்போட்டி தொடரில் சுமார் 20க்கும் அதிகமான அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ,பாடசாலைக்கும் இவ் அணியை பயிற்றுவித்து வழிநடத்திய ஆசிரியர் முஹம்மட் இஸ்மத், தேசிய கபடி அணி தலைவரும், இப் பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான எம். அஸ்லம் சஜா போன்றோருக்கும் முக்கியஸ்தர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.