
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறையின் சீர்திருத்தம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
இதன்படி, அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசின் கொள்கை, முன்மொழியப்பட்டதோடு கட்டண சூத்திரம், கடன்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளர்ச்சிக்கான மானியங்கள், மின்சார வாகனங்களாக மாற்றுதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கூரை சூரிய சக்திக்கான மானியங்கள் ஆகியவை இக்கலந்துரையாடல் விவாதிக்கப்பட்டதகா தெரிவித்திட்டுள்ளார்.