
உலகில் நடைபெறும் சுற்றுலா மாநாடுகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் அரபு சுற்றுலா மாநாடு நேற்று (03) ஆரம்பமானதோடு அரேபியாவில் உள்ள சுற்றுலாத் துறை தொடர்பான அனைத்து முக்கிய அமைப்புகளும் இம்மாநாட்டில்கலந்து கொண்டன.
அத்தோடு, ஏராளமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றதோடு இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் உதய இந்திரரத்ன, இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழுவின் தலைவர் பண்டுக கீர்த்தினாந்த, ஹெட்டிகொட, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சார்பில் திமுத்து மற்றும் இலங்கையின் பணிப்பாளர் நாயகம் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் பத்மா சிறிவர்தன, துஷான் விக்ரமசிங்க மற்றும் நளின் ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர்.