
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகளினால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் சஞ்சிவ நாலக விரசிங்க குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்தோடு, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்தமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, விலையை காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 16 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐம்பத்து இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.