
தேசிய கட்டுமான சங்கத்தின் கூற்றுப்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான துறையில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் நிர்மாணத்துறையின் பணிகளும் 70 வீதத்தால் முடங்கியுள்ளதாகவும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டுக் கடன்களோ அல்லது வெளிநாட்டு உதவிகளோ கிடைக்கும் வரை வீதி நிர்மாணமோ அபிவிருத்தியோ இடம்பெறாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் வரிச்சுமையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் சீனி மற்றும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்றவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது.