
123 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, மஹரகம, தம்ம மாவத்தையில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மஹரகம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.