
நிட்டம்புவ கஜுகம, பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு பெண்களும் இரண்டு பேரூந்துகளின் சாரதிகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி, கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களில் 23 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு நான்கு பேர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.