
மன்னார், துறைக்கு அருகில் படகு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 04 சந்தேக நபர்களும் 02 பெண் சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.
அத்தோடு, இவர்களில் மூன்று பிள்ளைகள் உட்பட 05 பேர் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.