
கணினி குற்றங்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சிறுவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கணினி குற்றங்களினூடாக வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
மேலும், இதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க மன்றம் முடிவு செய்ததாக மேலும் குறிப்பிடப் படுவதோடு தற்போது காலத்தின் அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாசலில் இருக்கும் குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.