
நாட்டில் சில நாட்களாக கொவிட் தொற்றுக்குள்ளானவர்களும் மற்றும் மரணிப்பவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி, இன்று (06) கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 08 ஆகவுள்ளதோடு நேற்றைய (05) தினம் 03 மரணங்கள் கொரோன தொற்றினால் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளது.