
குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நெருங்கியவர்களுக்கோ காய்ச்சல் பரவினால் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இன்புளுவன்சா வைரஸ் பரவும் தன்மை காணப்படுவதால், குடும்பத்தில் காய்ச்சல் நோயாளிகள் இருப்பின், வீட்டில் இருந்தாலும் முகமூடி அணிவது மிகவும் பொருத்தமானது என, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டெங்கு மற்றும் இன்புளுவென்சாவைத் தவிர, குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு பரவுவதும் அதிகரித்து வருவதாகவும் மேலும் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் குழந்தைகளின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்துமாறும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பதாக டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளதோடு குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், அது மோசமடையும் வரை வீட்டில் இருக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.