
- யூ.கே. காலித்தீன் –
ஐகேம் அபாகஸ், (ICAM Abacus) நிறுவனத்தின் 7வது தேசிய அபாகஸ் போட்டியின் முடிவில் கடந்த ஆண்டு ஜப்பான் சொரேபேவன் சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற தாறுல் இல்மு மாணவர்கள் 27 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது ஐகேம் அபாகஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரீ.எம்.சாபி, நிறுவனத்தின் செயலாளர் பாத்திமா சுக்ரா சாபி, கிழக்கு மாகாண இணைப்பாளரும் தாறுல் இல்மு நிறுவனப் பணிப்பாளருமாகிய ஏ. ராஸிக், நிறுவனத்தின் ஆசிரியப் பயிற்றுவிப்பு ஆசிரியை ஏ.ஆர். றிசானா ராஸிக், மற்றும் பிராந்திய இணைப்பாளர்கள் அபாகஸ் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.