
ஹட்டன் புகையிரத நிலைய ஓய்வு மண்டபத்தில் தங்கியிருந்த பயணிகளின் பணப்பைகளை இரவு தபால் ரயிலில் இருந்து திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பயணிகளால் பிடிக்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ஓய்வு விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பயணிகளின் பணப்பையை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடம் இருந்து பல தேசிய அடையாள அட்டைகள், பல வங்கி அட்டைகள் மற்றும் பல பெண்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.