
போலி நாணயத்தாள் அச்சடிக்கும் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, யாழ்.மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அச்சகத்தின் பெறுமதி சுமார் 13 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், யாழ்ப்பாணம் வைத்தியசாலை பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அச்சகத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பளை பிரதேசத்தில் அண்மையில் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட நபரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.