
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த உத்தரவை ஜூன் 22ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், முன்னாள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீள அழைக்கப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக வெளியான அறிக்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதினைத் தொடர்ந்து மேல்முறையீட்உடு நீதி மன்றத்தில் முறைப்பாடு ஷைட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.