
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவுக்கும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சத்ராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, லண்டனில் நடைபெற்று வரும் உலகக் கல்வி மாநாட்டில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்வில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதோடு உலகளவில் ஏனைய நாடுகளின் புதிய கல்வி அணுகுமுறைகள் மற்றும் இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் கல்வித் திறனை விரிவுபடுத்துவதற்கான வரம்புகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பேசியதாகவும் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.