
உலகின் வலிமையான பாதுகாப்பு அமைப்பான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ஜப்பானில் தொடர்பு அலுவலகத்தை திறக்க தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, ஜப்பானுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசியாவில் நேட்டோ அலுவலகம் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால், உலகின் ஸ்திரத்தன்மை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ள போதிலும் இது தொடர்பில் இரு தரப்பும் இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என குரியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மேலும், நேட்டோ என்பது 1949 இல் நிறுவப்பட்ட வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனவும் நேட்டோ என்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள 31 நாடுகளின் கூட்டணியாகும் எனவும் உறுப்பு நாடுகளின் மக்களையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றது என்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.